
நீலாய், நவம்பர் 12 – சீனாவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், இன்று காலை பண்டார் பாரு நீலாய் பகுதியிலுள்ள Apartment – இன் 18வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசீம் (Superintendan Abdul Malik Hasim) தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், மாணவர் அதே கட்டிடத்தில் தன் நாட்டைச் சேர்ந்த மற்றொரு ஆடவருடன் வசித்து வந்ததாகவும், வீட்டில் திருட்டு அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மாநில குற்றப்புலனாய்வு பிரிவு பரிசோதனையில் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் காதில் இரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்புகள் இருந்தன என அறியப்படுகின்றது.
பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, உடலில் குற்றவியல் கூறுகள் ஏதும் இல்லாததால் போலீசார் இம்மரணத்தை “திடீர் மரணம்” (SDR) என வகைப்படுத்தியுள்ளனர்.



