Latestமலேசியா

சிறைச்சாலைக்கு வெளியே ஷரியா பிரம்படி தண்டனைக்கு திரங்கானுவில் 9 பள்ளிவாசல்கள் தேர்வு

குவாலா திரங்கானு, நவம்பர்-14, திரங்கானு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைக்கு வெளியே நடைபெறும் பிரம்படி தண்டனைகளுக்காக, மாநில அரசு 9 பள்ளிவாசல்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்த அங்கீகாரம், சுல்தான் மீஸான் சைனால் அபிடின் அவர்களின் ஒப்புதலுடன், திரங்கானு இஸ்லாமிய மத மற்றும் மலாய் சடங்குகள் மன்றமான MAIDAM மூலம் வழங்கப்பட்டது.

தலைப்பட்டணமான குவாலா திரங்கானு மாவட்டத்தில் Masjid Abidin, Masjid Al-Muktafi Billah Shah ஆகிய 2 பள்ளிவாசல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பள்ளிவாசல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரம்படி தண்டனையை
பூங்காக்கள், திடல்கள், சந்தைகள் போன்ற பொது வெளிப்புற இடங்களில் நடத்துவது பற்றியும் மாநில அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எனினும் இது ஊராட்சி மன்றங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என அது கூறிற்று.

2022 திரங்கானு ஷரியா குற்றவியல் சட்டத் திருத்தத்தின் படி, கல்வத் குற்றத்திற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகபட்சம் 6 பிரம்படிகள், RM5,000 வரை அபராதம், அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!