
கோலாலாம்பூர், நவம்பர் 18-AKeMedia ஊடக விருது விழாவுக்குப் போட்டிக்கு வந்த எண்ணிக்கை உயர்ந்திருப்பதானது, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஊடகங்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருவதைப் புலப்படுத்துகின்றன.
மக்களுக்கு தகவல்களை வழங்குவதில் இருவழித் தொடர்பே அடிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் அமைச்சின் கடப்பாட்டுக்கு ஏற்ப இந்த நெருங்கிய உறவு அமைவதாக, KPKT அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
“திறந்த மனம், திறந்த கதவு, திறந்த இதயம்” என்ற கொள்கையின்படி, KPKT அமைச்சு எப்போதும் ஊடகங்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகளைத் திறந்த மனதோடு ஏற்றுகொள்வோம் என்றார் அவர்.
ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, குறிப்பாக மிகவும் முதிர்ச்சியடைந்த மற்றும் பொறுப்பான தகவல் தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில், அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
நேற்றிரவு கோலாலாம்பூரில் நடைபெற்ற AKeMedia 2025 ஊடக விருது விழா, தேசிய நீரோட்டத்தைச் சேர்ந்த மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களின் 200-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தது.
KPKT-யின் வர்த்தக தொடர்புப் பிரிவுக்கு ஓர் அங்கீகாரமாக, புகார் மேலாண்மைக்கான பிளாட்டினம் தர விருதும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இது மக்களின் குரல் கேட்பதிலும் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் அமைச்சின் தொடர் முயற்சிகளைக் குறிக்கிறது.



