
புனோம்பென், நவம்பர் 22-மத்திய கம்போடியாவில் இரவு நேர பேருந்து ஆற்றில் விழுந்ததில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 24 பேர் காயமுற்றனர். 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் Phnom Penh செல்லும் வழியில், அதிகாலை 3 மணிக்கு கிராமத்து பாலத்தில் பேருந்து தடம்புரண்டது.
இரவு நேர பயணத்திற்கு சுழல் முறையில் பணியில் இருந்த 2 ஓட்டுநர்களில் ஒருவர் சம்பவத்தின் போது தூக்கக் களைப்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், பேருந்து ஓட்டுநரும், உயிரிழந்தோர் பட்டியலில் உள்ளாரா என தெரிவிக்கப்படவில்லை.
விபத்துக்கு முன்பாக, உலகப் பிரசித்திப் பெற்ற அங்கோர் வாட் பழங்கால கோயில் வளாகம் இருக்கும் Siem Reap பகுதியில் பேருந்து நின்று சுற்றுப்பயணிகளை ஏற்றியுள்ளது.
எனினும் அனைத்துப் பயணிகளும் கம்போடிய பிரஜைகளே என போலீஸ் உறுதிப்படுத்தியது. ஆற்றில் பாதியாக மூழ்கி கிடந்த பேருந்து crane மூலம் தூக்கப்பட்ட படங்கள் வைரலாகியுள்ளன.



