
கோலாலம்பூர், டிசம்பர் 2 – ஜோகூர் மாநில மஇகா மகளிர் முன்னாள் கிளை தலைவிகள் செய்த அரும்பணியை பாராட்டி அவர்களுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வருகை புரிய ஒரு நல்லண்ண விருந்து அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வின்போது, முன்னாள் கிளை மகளிருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
சுமார் 500 மகளிர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மஇகாவின் உதவி தலைவர் டத்தோ அசோஜன், மஇகாவின் மகளிர் அணி தலைவி சரஸ்வதி, மாநில மகளிர் அணி பொறுப்பாளர்கள், மாநில மஇகா செயலாளர் குமரன் ராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



