
கோலாலாம்பூர், டிசம்பர்-1 – ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட சில அதிகாரிகளை கல்வி அமைச்சு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
உள்விசாரணை முடிவும் வரை அவர்கள் யாரும் கல்வி அமைச்சின் கீழ் எந்த கல்வி நிறுவனங்களிலும் இருக்கக் கூடாது; இந்நிலையில், அனைத்து மட்டங்களிலும் ஒழுங்கீன நடவடிக்கைகள் முறியடிக்கப்படுவதை உறுதிச் செய்ய, துறைத் தலைவர்களும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டுமென அமைச்சு உத்தரவிட்டது.
அமைச்சின் நம்பகத்தன்மை மற்றும் ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடாத என்பதால், எந்தவித தவறான நடத்தைக்கும் இடமில்லை என அமைச்சு விளக்கியது.
இந்நடவடிக்கை, கல்வி அமைப்பின் மதிப்பை காக்கவும், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அனைவரும் தொழில்முறை தரத்தையும், நெறிமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அமைச்சு இவ்வேளையில் மீண்டும் நினைவூட்டியது.
எந்த ஒழுங்கீனச் செயல் என குறிப்பிடாவிட்டாலும், அண்மையில் கோலாலாம்பூர் சௌகிட்டில் 202 ஆண்கள் கைதான சம்பவத்தை குறிப்பிட்டு தான் அமைச்சு குறிப்பிடுவதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர் உள்ளிட்ட 17 அரசு ஊழியர்களும் அவர்களில் அடங்குவர்.



