உயிரியல் பூங்காவின் கூண்டுக்குள் ஏற முயன்ற இளைஞனை சிங்கம் கடித்து குதறியது

ரியோ டி ஜெனிஐரோ, டிச 3 – பிரேசிலில் உள்ள அருடா கமாரா ( Arund Camara Zoobotanical parK ) உயிரியல் பூங்காவில், அங்கிருந்த பார்வையாளர்கள் முன்னிலையில், பதின்மவயது இளைஞன் ஒருவனை பெண் சிங்கம் ஒன்று கடித்து குதறிதால் கொல்லப்பட்டான். அந்த இளைஞன் ஆறு மீட்டர் உயர சுவரில் ஏறி, பாதுகாப்பு வேலியைக் கடந்து, ஒரு மரத்தின் வழியாக விலங்கின் கூண்டுக்குள் இறங்கிய பிறகு இந்த துயரச் சம்பவம் நடந்தது. கெர்சன் டி மெலோ மச்சாடோ ( Gerson de Melo Machado ) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த 19 வயது இளைஞனுக்கு கடுமையான மனநலப் பிரச்சனைகள் இருந்ததாகவும், சிங்கத்தை அடக்கும் பணியாளராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மச்சாடோ வேண்டுமென்றே சிங்கக் கூண்டிற்குள் நுழைந்ததாக வடகிழக்கு பிரேசிலில் உள்ள ஜோவா பெசோவின் ( Joao Pessoa )
நகராட்சி அரசாங்கம் தெரிவித்துள்ளது. வைரலாகப் பரவிய சம்பவத்தின் காட்சிகளில், லியோனா என்ற பெண் சிங்கம், மச்சாடோவை ஒரு மரத்திலிருந்து இழுத்து, அவரைத் தாக்கி கொன்றதைக் காட்டுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த உயிரியல் பூங்கா தற்போது தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.



