
கோலாலம்பூர், டிசம்பர் 3 – வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஆறு மாநிலங்களில் தொடர்ச்சியான கனமழை ஏற்படும் என்று மலேசிய வானிலைத் துறையான METMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபா Sandakan மற்றும் Kudat பகுதிகளில் வெள்ளி முதல் சனிக்கிழமை வரை மழை அதிகரிக்கவுள்ளது. அதே நேரத்தில் திரெங்கானு மற்றும் கிளாந்தான் Tumpat, Pasir Mas, Kota Bharu, Bachok, Pasir Puteh ஆகிய பகுதிகளிலும் மழை நீடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஹாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய இடங்களில் சனி முதல் ஞாயிற்று கிழமை வரையிலும், ஜோகூரில் சிகாமாட், குளுவாங், மெர்சிங், Kulai, Kota Tinggi மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் ஞாயிறு முதல் திங்கட்கிழமை வரையிலும் கனமழை ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே காலத்தில் மழை தொடருமென MetMalaysia குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எந்த நேரத்திலும் மீண்டும் தொடங்கக்கூடும் என்பதால் மோசமான வானிலையின் தெளிவான அறிகுறிகள் தெரிந்தால் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வெளியிடப்படவுள்ளது.



