Latestமலேசியா

கட்டிடத்தின் 3ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த ஆடவர் மரணம்

கோலாலம்பூர், டிச 3 -புடுவில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து, Pickleball பந்தை மீட்டெடுக்க வேலியில் ஏற முயன்ற ஆடவர் ஒருவர் அங்கிருந்து கீழே விழுந்ததால் மரணம் அடைந்தார். 32 வயதுடைய அந்த ஆடவர் செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.43 அளவில் கீழே விழுந்தது குறித்த தகவல் போலீஸிற்கு கிடைத்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் லாஷிம் இஸ்மாயில் ( Mohamad Lazim Ismail ) தெரிவித்தார்.

அந்த ஆடவர் இதற்கு முன் அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் Pickleball விளையாடியதாகவும் பந்து வெளியே விழுந்ததால் அப்பந்தை எடுக்க மைதானத்திற்கு அடுத்துள்ள வேலியில் ஏறியபோது வழுக்கி தரை தளத்திற்கு விழுந்துள்ளார். கடுமையான காயத்திற்கு உள்ளான அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என உறுதிப்படுத்தப்பட்டது. அவரது இறப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதோடு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக முகமட் லாஷிம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!