Latestமலேசியா

தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, டிசம்பர்-4 – கடந்த மாதம் கெடா, பெடோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில், வெல்டிங் தொழில் செய்பவரான 38 வயது இந்தியப் பிரஜை இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

நவம்பர் 13-ஆம் தேதி முறையான அனுமதியின்றி கருப்பு நிற Sig Sauer இரக கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக, Mohd Haseen மீது 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

மீ தயாரிக்கும் தொழிற்சாலையின் தொழிலாளர் குடியிருப்பில் 2 தோட்டாக்கள், தோட்டா உறையும் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

அவ்வாடவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், ஜனவரி 7-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!