
பேராக் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் விவகாரங்களில் சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க, அவற்றை அரசாங்க பதிவேட்டின் கீழ் ஆவணப்படுத்தும்படி பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்..
தற்போது தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பெயர் மாற்றம் விவகாரம் முற்றுப்பெற்றுள்ளது.
ஈப்போ ஃபேர் பார்க்( Fair Park) ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயமும் அரசாங்க பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டது.
இத்தகைய பிரச்சனை நாடு முழுவதுமுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கி வருகின்றன.
பேராக் மாநிலத்தில் இனி மாவட்ட ஆட்சியாளருக்கு ஆலயத்தை பராமரிக்கும் தரப்பை தேர்வு செய்யும் தகுதிகள் கிடையாது.
இவ்விவகாரத்தில் பாகான் டத்தோ சிம்பாங் அம்பாட் முருகன் ஆலயம் உருவான நிலைப்பாட்டையும் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பேராக்கில் இதுவரை 10 தமிழ்ப்பள்ளிகள் முறையாக அரசாங்க பதிவேட்டின் கீழ் ஆவணப்படுத்தியாகி விட்டன.
குறிப்பாக, கம்பார் தமிழ்ப்பள்ளியை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்த தவறிய போது ஒரு சில பொறுப்பற்ற தரப்பினர் அப்பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று எடுத்துக்கொண்டனர்.
ஈப்போ சத்தியசீலா தமிழ்ப்பள்ளியும் இத்தகைய நிலைப்பாட்டை எதிர்நோக்கியது.
மஞ்சோங்கில் கொலம்பியா தமிழ்ப்பள்ளியின் நிலப்பிரிமியம் 1.4 மில்லியன் ரிங்கிட் பிரச்சினையும் சுமுகமாக தீர்வு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.



