Latestமலேசியா

அமைச்சரவை மாற்றத்தில் அவசரப்படவில்லை; கவனமாக முடிவு எடுப்பேன் – அன்வார்

புக்கிட் ஜாலில், டிசம்பர்-7 – அமைச்சரவை மாற்றத்தில் அவசரம் காட்டப்போவதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

அது குறித்து கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

என்னதான் அமைச்சரவை நியமனம் என்பது பிரதமரின் தனியுரிமை என்றாலும், ஒற்றுமை அரசாங்கக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி இறுதி முடிவுக்கு வருவேன் என்றார் அவர்.

எனினும், இதுவரை DAP தலைவர் அந்தோணி லோக்கையோ அல்லது தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியையோ அது குறித்து சந்திக்கவில்லை என, புக்கிட் ஜாலிலில் ’Rethinking Ourselves: Justice, Reform and Ignorance in Postnormal Times’ என்ற தனத் புதிய நூல் வெளியீட்டுக்குப் பிறகு அவர் சொன்னார்.

தற்போது பொருளாதாரம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, முதலீடு -வாணிபம்-தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு என 4 அமைச்சு பொறுப்புகள் காலியாக உள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த அமைச்சரவை மாற்றம், 2022-ல் அன்வார் நாட்டின் 10-ஆவது பிரதமரான பிறகு நடைபெறப் போகும் இரண்டாவது மாற்றமாகும்.

இதற்கு முன் 2023 டிசம்பரில் சிறிய அளவில் மடானி அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!