
கோலாலம்பூர், டிச 11 – ஷா ஆலமில் கெமுனிங் டோல் சாவாடியில் நேற்று ஒரு டிரெய்லர் மோதியதில் டோல் சாவாடியின் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் இரண்டு குழந்தைகளை ஏற்றிச் சென்ற இரண்டு கார்கள் மீதும் அந்த டிரெய்லர் மோதியதாகவும், ஆனால் அதில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக தங்கள் வாகனங்களிலிருந்து வெளியேற முடிந்தது என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் டோல் சாவடி ஊழியர் மட்டுமே காயம் அடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் ( Ahmad Mukhlis Mukhtar ) தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இரவு மணி 9.17 க்கு தங்களது துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் , ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.



