
மாசாய், டிசம்பர்-14 – ஜோகூர், மாசாயில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சிவ ஸ்ரீ PD ஷண்முகம் சிவாச்சாரியார் தலைமையில் காலை 9.00 மணி முதல் 9.30 மணி வரை
சுபமுகூர்த்த நேரத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தேறியது.
இந்தியா – மலேசியா இரு நாடுகளின் குருக்களும் இணைந்து நடத்தி வைத்த கும்பாபிஷேகமாக இது அமைந்ததாக, ஆலயத் தலைவர் ஈஸ்வரன் கூறினார்.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
டிசம்பர் 10 முதலே
யாகசாலை பூஜைகள், ஹோமங்கள்,
அபிஷேகங்கள் மற்றும்
பல்வேறு விசேஷ பூஜைகள்
தினமும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இன்று சுமார் 1,500 பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு,
ஸ்ரீ முனீஸ்வரர்,
ஸ்ரீ காசி விஸ்வநாதர்,
ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை
ஆகிய தெய்வங்களின்
அருளைப் பெற்றுச் சென்றதாக ஈஸ்வரன் சொன்னார்.
திருமுறை பாடுவதற்கு இந்தியா, ஹைதராபாத்திலிருந்து Dr ரவி சிறப்பு வருகைத் தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பக்தர்களுக்கு அன்னதானத்துடன் கும்பாபிஷேகம் நிறைவடைந்தது.



