
கோத்தா பாரு, டிசம்பர் 18 – சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டவர்களைக் கிளந்தானிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல, ஒவ்வொரு நபருக்கும் 150 முதல் 500 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக கிளந்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மியான்மரிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களை எல்லைப் பகுதி வரை அழைத்து வந்து, பின்னர் சில நாட்களுக்கு பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வாகனத்தில் அனுப்பி வைத்து விடுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மாதம் வரை, போலீசார் 70 ஆள் கடத்துபவர்களையும், 332 சட்டவிரோத குடியேறிகளையும் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் கார் மற்றும் பேருந்து உள்ளிட்ட 47 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவர்களை மறைத்து வைத்த குற்றத்தில் 53 பாதுகாவலர்களும் 214 சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு, 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் ATIPSOM மற்றும் குடியேற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



