
கோலாலம்பூர், டிசம்பர் 21-கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியொன்றில் முதல் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு செல்லும் மின்படிக்கட்டிலிருந்து விழுந்து குழந்தைப் பராமரிப்பாளரான ஒரு பெண்ணும், 2 வயது ஆண் குழந்தையும் காயடைந்தனர்.
நேற்று மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் கூறியது.
மின்படிக்கட்டில் குழந்தைத் தள்ளுவண்டியை தள்ளும் போது, அதனுடன் சேர்த்து 40 வயது அந்த இந்தோனேசிய மாதுவும் கீழே விழுந்தார்.
தள்ளுவண்டியில் இருந்த குழந்தை உடனடியாக கிளினிக் கொண்டுச் செல்லப்பட்டது.
பரிசோதனையில், நெற்றியில் இலேசான அடியைத் தவிர வேறெந்த காயமும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டது.
குழந்தை பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட வேளை, கழுத்திலும் காலிலும் காயமடைந்த குழந்தைப் பராமரிப்பாளர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



