
கோலாலம்பூர், டிச 22- 1MDB தொடர்பான சொத்துக்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக 12 ஓவியங்கள் தற்போது மேல் நடவடிக்கைக்காக காக மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.
30 மில்லியன் அமெரிக்க டாலர் கிட்டத்தட்ட 140 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அனைத்து பிரபல ஓவியரின் ஓவியங்களையும் கொண்டு வருவதற்கான தளவாடச் செலவுகளை நாடு தற்போது மதிப்பீடு செய்துவருவதாக கூறப்படுகிறது.
ஓவியங்களின் தரம் பராமரிக்கப்பட வேண்டும், குறிப்பாக மறுவிற்பனை நோக்கங்களுக்காக, அவற்றை அப்படியே திரும்பக் கொண்டுவர முடியாது. ஓவியங்கள் மலேசியாவிற்கு பாதுகாப்பாக வந்து சேருவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இரு தரப்பினராலும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
மிகவும் மதிப்புமிக்க ஓவியங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான செலவை நாங்கள் தற்போது மதிப்பீடு செய்து வருகிறோம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமட் ஜம்ரி ஜைனுல் அபிடின் ( Mohamad Zamri Zainul Abidin ) கூறினார்.
இந்த ஓவியங்கள் நாட்டின் இறையாண்மைக்கு முக்கியமானவை என்பதால் அவற்றை மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் செயல்முறை உட்பட, முறையாக பரிமாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம், 1MDB தொடர்பான சொத்துக்களை மீட்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 12 ஓவியங்கள் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டன.



