Latestமலேசியா

சிலாங்கூரில் 2026 ஜனவரி முதல் நிலைத்தன்மை கட்டணம் அமுல்

கிள்ளான், டிசம்பர்-24 – MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றம், 2026 ஜனவரி 1 முதல் சிலாங்கூரில் நிலைத்தன்மை கட்டணத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறது.

இக்கட்டணம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்குமிடங்களில் check-in செய்யும் போது வசூலிக்கப்படும்.

ஹோட்டல் வகை மற்றும் தங்கும் இடத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

அதாவது, 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஒரு நாள் இரவு RM7,
1 முதல் 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தர அந்தஸ்தை கொண்டிராத ஹோட்டல்களுக்கு RM5, பட்ஜெட் ஹோட்டல் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு RM2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவிர, Home Stay, Airbnb மற்றும் MOTAC-குடன் பதிவுச் செய்யப்பட்ட தங்குமிடங்களுக்கு RM3, camping மற்றும் campervan தளங்களுக்கு RM3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் ஊராட்சி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும்; ஹோட்டல் நிர்வாகிகள் வசூல் மேலாளராக செயல்படுவர்.

2026-ல், கிள்ளான் மாநகரை நிலைத்தன்மைமிக்க, சுத்தமான மற்றும் வசதியான வாழ்விடமாக மாற்ற MBDK தொடர்ந்து நகர வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் பொது சேவைகளை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!