
செந்தூல், ஜனவரி-3 – கோலாலம்பூர் செந்தூல் பசார் பகுதியில் ஒரு மினி casino போல மாற்றப்பட்டிருந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், கனடா பிரஜை உட்பட 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் poker சீட்டுக் கட்டுகளை வைத்து சூதாடிய போது, அந்த Op Dadu சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
23 முதல் 42 வயதிலான ஐவரும் விசாரணைக்காக போலீஸ் காவலில் உள்ளனர்.
சூதாட்டக் கட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனை, தலைநகரில் சட்டவிரோத சூதாட்டத்துக்கு எதிரான போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
மலேசிய சட்டப்படி அனுமதியில்லாமல் சூதாட்டம் நடத்துவது குற்றமாகும்.
சிவில் சட்டத்தின் கீழ், அதற்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
முஸ்லீம்களுக்கு, ஷரியா சட்டத்தின் கீழ் கூடுதல் தண்டனைகள் விதிக்கப்படலாம்.



