Latestமலேசியா

மலாக்காவில் 13 வயது சிறுவன், பூட்டப்பட்ட குளியலறையில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்தான்

மலாக்கா, ஜனவரி-8 – மலாக்கா தெங்கா, தாமான் மெர்டேகாவில், 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் பூட்டப்பட்ட குளியலறையில் மயக்க நிலையில் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டான்.

அவனது பெற்றோர் காலையில் ஒரு வேலையாக வெளியே சென்று, சுமார் 11.30 மணிக்கு வீடு திரும்பியபோது, குளியலறையில் நீர் ஓடும் சத்தம் கேட்டதால் கதவைத் திறக்க முயன்றனர்.

கதவு பூட்டப்பட்டிருந்ததால், தந்தை கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது சிறுவன் மயக்க நிலையில் கிடந்தான்.

அவசரமாக அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு, சிறுவன் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான்.

மருத்துவர்கள் 30 நிமிடங்கள் CPR முதலுதவி செய்தும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

எந்த குற்றச்செயல் கூறுகளும் கண்டறியப்படாததால், தற்போதைக்கு போலீஸார் இந்தச் சம்பவத்தை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளனர்.

மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய சவப்பரிசோதனை நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!