
முவாலிம், ஜனவரி-11 – பேராக், முவாலிம் மாவட்டத்தில் உள்ள புரோட்டோன் சிட்டி தொழிற்பேட்டையில் புலி உறுமும் சத்தம் கேட்டதாகக் கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
Ujana Muallim பொழுதுபோக்கு பூங்கா அருகே புலியின் உறுமல் போன்ற அச்சத்தம் கேட்பது வீடியோவில் தெரிகிறது.
இதையடுத்து, அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில் அங்கு புலி நடமாட்டம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியிருப்போர், எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பாக இரவு நேரங்களில் காட்டுப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் இதே போன்ற சந்தேகமான சத்தம் கேட்டாலோ அல்லது உண்மையிலேயே புலியை கண்டாலோ உடனே தகவல் தெரிவிக்குமாறும் PERHILITAN கேட்டுக் கொண்டது.



