Latestமலேசியா

நஜீப் விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கையில் அளவோடு நடக்க வேண்டும்; DAP தலைவர்களுக்கு அந்தோனி லோக் நினைவுறுத்து

கோலாலாம்பூர், ஜனவரி-12-வெளிப்படையாக கருத்துகளை வெளியிடுவதில் DAP கட்சியினர் அளவோடு நடந்து கொள்ள வேண்டும் என, அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேவையற்ற கருத்துகள், ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான அம்னோவுடன் உள்ள உறவுகளை பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டு காவல் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததை கொண்டாடும் வகையில், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Yee Bin சமூக ஊடகத்தில் பதிவிட்டதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையை அந்தோணி லோக் நினைவூட்டினார்.

நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கனவே நஜீப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது; அதனை மேலும் மோசமாக அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அந்த போக்குவரத்து அமைச்சர், இந்த சர்ச்சை தேவையற்றது என்றார்.

நிதானம் காத்திருந்தால் அதனை மேலும் கவனமாக கையாண்டிருக்கலாம் என, சீன மொழி போட்காஸ்டான ‘The Keywords நிகழ்ச்சியில் பேசிய போது, அந்தோணி லோக் சொன்னார்.

நஜீப் விவகாரத்தில் DAP-யின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக உள்ளது; அவரின் வீழ்ச்சியே சீர்திருத்தங்களுக்கு தொடக்கமாக இருந்து, 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழக்கக் காரணமானது.

அதே போல் தான் வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவும்…நஜீப்பின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து, அவர் தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

அதாவது செய்த பலனை அனுபவிக்கிறார்…எனவே, இதற்கு மேலும் DAP கருத்துத் தெரிவிக்கத் தேவையில்லை என அந்தோணி லோக் சொன்னார்.

முன்னாள் அமைச்சருமான Yeo Bee Yin-னின் செயல், முன்னதாக அம்னோ வட்டாரங்களில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி, அவரின் அலுவலகத்திற்கு முன் அம்னோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!