
ஜோகூர் பாரு, ஜனவரி 13 – Taman Perling பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் மற்றொருவரை அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய நபர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதனை காவல்துறை உறுதி செய்துள்ளது.
நேற்று மாலை நடந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆடவரை அறைந்த அந்த போலீஸ் அதிகாரி IPD ஜோகூர் பாரு வடக்கு தலைமையகத்தைச் சேர்ந்தவர் என ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்த்துறை துணைத் தலைவர் Superintenden Azrol Anuar Nor,கூறியுள்ளார்.
இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விசாரணைக்காக அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சட்டம் அல்லது ஒழுக்க விதிகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 33 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்றில், ஒரு பெண்ணுடன் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் அறையும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.



