Latestஉலகம்

நரதிவாட் குண்டு வெடிப்பில் தொடர்பு; 3 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியீடு

கோத்தா பாரு, ஜன 19 – ஜனவரி 11 ஆம் தேதி  Narathiwat மாநிலத்தில் உள்ள  ஐந்து பெட்ரோல் நிலையங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில்  தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை தாய்லாந்து அதிகாரிகள் இன்று வெளியிட்டனர்.  

அவர்கள் மலேசிய எல்லையில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.  தாக்குதல்களில் மோசமாக சேதமடைந்த நராதிவத், யாலா மற்றும் பட்டானியில் உள்ள 11 எரிபொருள் நிலையங்களில்  அந்த ஐந்து  பெட்ரோல் நிலையங்களும் அடங்கும்.  

 44 வயதுடைய   Burhanuddeen   Samae ,   28  வயதுடைய  Hafiz  Busa  ,  மற்றும்  44 வயதுடைய   Si  Masae   ஆகியோரே அந்த சந்தேகப்  பேர்வழிகள் என  தாய்லாந்தின் நான்காவது இராணுவ பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  Narathip   Phoyanok  தெரிவித்தார்.    

 Pattani  மற்றும் Narathiwat ட்டைச் சேர்ந்த அந்த  நபர்களுக்கு எதிராக ஜனவரி 11 ஆம் தேதி இரவு Narathiwat  நீதிமன்றம்

கைது உத்தரவை பிறப்பித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!