Latestமலேசியா

காஜாங் நெடுஞ்சாலையில் அதிர்ச்சி: பாதையின் நடுவில் அமர்ந்த லாரி ஓட்டுநர் மீது போலீஸ் விசாரணை

காஜாங், ஜனவரி-25 – காஜாங் நெடுஞ்சாலையில், ஒரு லாரி ஓட்டுநர் தன் வாகனத்தை அவசர பாதையில் நிறுத்தி விட்டு,
சாலையின் நடுவே கால்களை மடித்து சம்மணம் போட்டு அமர்ந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு அவ்வாடவர் பாட்டுக்கு அமர்ந்திருப்பதும், அவரை மோதி விடாமலிருக்க வாகனங்கள் ஒதுங்கிபோவதும் வீடியோவில் தெரிகிறது.

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு,
பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாக பரவியதால்,
போலீஸார் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தகவல் தெரிந்தோர் விசாணைக்கு உதவுமாறு காஜாங் போலீஸ் கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!