
ஜோர்ஜ் டவுன். ஜன 27 – ஆயர் ஈத்தாமிலுள்ள அடுக்கு மாடி வீட்டில் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடக்கக் காணப்பட்டது.
காலை மணி 8.55 அளவில் இது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதாக Timur Laut மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Lee சுவி சகே ( Lee Swee sake ) தெரிவித்தார்.
அதுவொரு Rohingya ஆண் குழுந்தை என விசாரணையில் கண்டறியப்பட்டது.
காலை மணி 7 அளவில் படுக்கை அறையில் அந்த குழந்தை சுயநினைவின்றி கிடந்ததை அதன் பெற்றோர்கள் கண்டுள்ளனர்.
அக்குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லையென பரிசோதனையின் மூலம் தெரியவந்தது.
எனினும் அந்த குழந்தைக்கு நுரையீரல் பிரச்சனை பின்னணி இருப்பதாகவும் விசாரணை மூலம் தெரியவந்ததாக Lee Swee வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அக்குழந்தையின் உடலில் தடயயியல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதோடு அது திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



