
சிரம்பான், ஜனவரி-28-சிரம்பானில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 2 வயது சிறுவன், காருக்குள் 9 மணி நேரம் தனியே விடப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று காலை 8 மணிக்கு தாயார் வேலைக்குச் செல்லும் முன் குழந்தைப் பராமரிப்பாளரிடம் சிறுவனை ஒப்படைக்க மறந்துவிட்டார்.
பின்னர், மாலை 5 மணிக்கு வேலை முடிந்து திரும்பும் போதே குழந்தை இன்னும் காரில் இருப்பதை அவர் உணர்ந்தார்.
உடனடியாக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக இருந்த காரணத்தால், 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக 35 வயது தாய் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளை வாகனத்தில் தனியாக விடுவது சில நிமிடங்களிலேயே உயிருக்கு ஆபத்தாக மாறும் என்பதால், எந்நேரமும் அதிக கவனத்தோடு இருக்குமாறு போலீஸ் பெற்றோரை மீண்டு நினைவுறுத்தியுள்ளது.



