Latestமலேசியா

ஓடும் ETS இரயிலில் சமைத்த பயணி; குளுவாங்கில் பரபரப்பு

குளுவாங், பிப்ரவரி-4-ETS இரயிலில் ஜோகூர் பாருவில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த ஒருவர், இருக்கையில் மின் adapter-ரைப் பயன்படுத்தி மின்சார அடுப்பில் உணவு சமைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனப் பிரஜை என நம்பப்படும் அவ்வாடவரின் செயலால் அதிர்ச்சியடைந்த மற்றொரு பயணி உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க, குளுவாங் நிலையத்தில் பணியாளர்கள் அந்நபரை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்த புகைப்படத்தைப் புகார்தாரர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பியுள்ளார்.

பலர் நகைச்சுவையாக விமர்சித்தாலும், மின்சார தாக்குதல் மற்றும் தீ விபத்து அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!