குறைந்த செலவிலான டிஜட்டல் மூலம் My50 பாஸ் வாங்கும் திட்டம்; பிரசாரனா தொடங்கியது

கோலாலம்பூர், பிப் 5 – பிரசரானா மலேசியா பெர்ஹாட் (PRASARANA) My50 பாஸ் சேமிப்பு டிராக்கரை அறிமுகப்படுத்தியதோடு , பயனர்கள் பயண பாஸ் சேவைகளை மிகவும் நெகிழ்வாக அணுகுவதை எளிதாக்கும் வகையில் ரேபிட் சிட்டி பாஸ் மற்றும் ரேபிட் கெம்பரா (Pas Rapid Kembara)பாஸை டிஜிட்டல் முறையில் வாங்கும் வசதியை விரிவுபடுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் My50 பாஸ் பயனர்கள் தங்கள் பயணப் பதிவுகளைப் பார்க்கவும், டச் ‘என் கோ (Touch n Go)எலக்ட்ரானிக் வோலட் பயன்பாட்டில் தொடங்கப்பட்ட புதிய அம்சத்தின் மூலம் அவர்களின் சேமிப்பு நிலைகளை மதிப்பிடவும் அனுமதிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ( Anthony Loke)கூறினார்.
இந்த வசதி ரயில் மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு பயணத்தையும் பதிவு செய்ய அனுமதிக்கிறது. 30 நாள் சந்தா காலத்திற்குள் பயன்படுத்திய மதிப்பு 50 ரிங்கிட்டை எட்டவில்லை என்றால் அவர்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும்.
பிரேக்-ஈவன் (break-even)புள்ளியை அடையத் தேவையான காலத்தைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிப்பதையும், அதிக பயணங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் My50 பாஸை அதிகம் பயன்படுத்த ஊக்குவிப்பதையும் இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகளின் உண்மையான செலவு மற்றும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் மானியத் தொகை குறித்து பயனீட்டாளர்கள் விழிப்புணர்வு பெறுவதற்கும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு My50 பயனரின் உண்மையான செலவு மாதத்திற்கு சுமார் 150 ரிங்கிட் ஆகும்.
ஆனால் பயனர் 50 ரிங்கிட் மட்டுமே செலுத்துகிறார். அதே நேரத்தில் அரசாங்கம் மாதத்திற்கு 100 ரிங்கிட்டை ஈடுகட்டுகிறது. இது ஒரு பயனருக்கு ஒரு ஆண்டிற்கு 1,200 ரிங்கிட்டிற்கு இணையாகும்.



