Latestமலேசியா

கிள்ளானில் விபச்சார மையத்தில் அதிரடி சோதனை; 23 பேர் கைது

கிள்ளான், பிப் 24 – கிள்ளான் Jalan Kemமில் பழைய வரிசை கடைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த விபச்சார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 18 பெண்களுடன், அந்த விடுதியின் கண்கணிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் என நம்பப்படும் 4 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறையின் ரகசிய குண்டர் கும்பல், சூதாட்டம் மற்றும் விபச்சார துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இன்று நண்பகல் மணி 1.15 அளவில் இந்த சோதனையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!