
புத்ராஜெயா, ஜூலை-24-திரெங்கானு கடற்பகுதியில் விடுமுறையின்போது கணவாய் மீன் பிடிக்கச் சென்ற நிர்வாக உதவியாளர் Muhammad Farris Zakwan, அடர்ந்த கடலின் நடுவே எதிர்பாராமல் தாக்கிய பேரலைகளால் படகு கவிழ்ந்ததில் மரணத்தின் விளிம்பு வரை சென்று போராடி உயிர் தப்பியுள்ளார்.
கை நரம்புகள் துண்டிக்கப்பட்டு, பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, “யாரும் ஆதரவில்லை” என்ற கவலை எழவே இல்லை.
காரணம், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO உடனடியாக களத்தில் இறங்கி, அவரது துயர் துடைக்கும் அரணாக நின்றது.
விபத்து நடந்தது வேலை நேரத்தில் இல்லை; மாறாக விடுமுறை நாளில். இருப்பினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை 24 மணிநேரமும் உறுதிச் செய்யும் LINDUNG 24 Jam திட்டத்தின் மூலம், PERKESO உடனடியாக செயல்பட்டு அவருக்கு முழு ஆதரவையும் வழங்கி வருகிறது:
பணி செய்ய முடியாத தற்காலிக சூழலில், அவருக்கு பொருளாதாரச் சுமை ஏற்படாதவாறு தற்காலிக ஊனமுற்றோர் பலன்கள் (FHUS) உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
அவரது கை இயல்பு நிலைக்குத் திரும்பத் தேவையான முழுமையான Fisioterapi பராமரிப்புச் செலவுகள் அனைத்தையும் PERKESO-வே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
“ஆபத்து எந்த வடிவில், எந்த நேரத்தில் வந்தாலும் ஒரு தொழிலாளி தனித்து விடப்பட மாட்டார்; PERKESO எப்போதும் அவர்களின் நிழலாகக் கூடவே இருக்கும்” என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான சம்பவமே மிகச்சிறந்த சான்றாகும்.
ஒருபுறம் PERKESO தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, மறுபுறம் மனிதவள அமைச்சான KESUMA, MYFutureJobs தளம் வாயிலாக நாட்டின் தொழிலாளர் சந்தைக்குப் புதிய பலத்தை அளித்து வருகிறது.
தற்போது 96,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன…
அவற்றில் 40% உயர் திறன் சார்ந்த வேலைகள் , 30%-க்கும் அதிகமானவை தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வி (TVET) சார்ந்தவை , 20% மாதத்திற்கு RM5,000-க்கும் அதிகமான நல்ல ஊதியம் வழங்கும் வேலைகள்.
வேலைவாய்ப்புகள் மற்றும் 24 மணிநேரச் சமூகப் பாதுகாப்பு சலுகைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிய, MYFutureJobs மற்றும் PERKESO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்வையிடவும்.



