
கோலாலாம்பூர், பிப்ரவரி-27,மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மூட்டு மற்றும் தசை தொடர்பான வலி காரணமாக சுகவீனமடைந்துள்ளார்.
தேசிய அரண்மனையான இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில், பின்னங்காலிலும் இடுப்பிலும் வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு முழுமையான ஓய்வைப் பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் நேற்று திட்டமிடப்பட்ட இஃப்தார் நோன்புத் துறக்கும் நிகழ்ச்சியிலும் மாமன்னர் கலந்துகொள்ளவில்லை.
தவிர, UPNM சுல்தான் இப்ராஹிம் பள்ளிவாசல் திறப்பு விழாவும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாமன்னரின் உடல்நலம் மேம்பட்டதும், அவர் மீண்டும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.



