Latestமலேசியா

நூதனமாக ‘upgrade’ ஆன பிச்சைக்காரர்கள்; புதிய யுக்தியை முறியடிக்க அதிகாரிகளுக்குக் கோரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி-28-பொது இடங்களில் புதிய முறையில் பிச்சை எடுக்கும் ‘upgrade’ பிச்சைக்காரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ‘நவீன’ பிச்சைக்காரர்கள் மாஸ்கோட் உடைகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான உடைகள் அணிந்து பொது மக்களின் இரக்கத்தை பெற்று பணம் கேட்கின்றனர்.

குறிப்பாக குழந்தைகளை ஈர்த்து அதன் மூலம் அவர்களின் பெற்றோர்களிடம் பிச்சை வாங்குகின்றனர்.

இச்செயல் வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடைபாதைகளில் தற்போது காணப்படுகிறது.

இப்படி நூதன முறையில் பிச்சை எடுப்பதால், அவர்களை அடையாளம் காணவும் முறியடிக்கவும் அதிகாரிகளுக்கு சிரமமாக உள்ளது.

தவிர, இது ‘ஒழுங்குபடுத்தப்பட்ட’ பிச்சை எடுக்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் அபாயமும் உள்ளதாக கவலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகாரிகள் கண்காணிப்பை வலுப்படுத்தி, பொது இடங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து சந்தேகத்திற்குரிய செயல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!