Latestமலேசியா

தூக்கி வீசப்பட்ட கொரியர் பெட்டி: உடைந்துச் சிறிய 18 பீங்கான் மங்குகள்

கோலாலாம்பூர், மார்ச்-1-வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த 18 பீங்கான் மங்குகள், உடைந்துச் சிதறிய நிலையிலேயே அவரின் கைகளுக்குக் கிடைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

“Fragile” அதாவது எளிதில் உடையக் கூடிய பொருள் என குறிக்கப்பட்டும், அதனை கண்டுகொள்ளாமல் பெட்டியை வேலிக்கு மேல் கொரியர் அனுப்புநர் தூக்கி எறிந்ததால், தட்டுகள் சிதறியதாக பாதிக்கப்பட்ட பெண் Threads சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

பெட்டி வேலியைத் தாண்டி விழுவதையும், உள்ளே இருந்த பீங்கான் மங்குகள் உடையும் சத்தத்தையும், வைரலான CCTV பதிவில் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.

வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், கொரியர் சேவைகளின் நம்பகத்தன்மை குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்த கொரியர் நிறுவனம், நடந்த சம்பவத்துக்காக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதோடு, முழு பணத்தைத் திருப்பி வழங்குவதாகவும், பணியாளர்களுக்கு புதிய பயிற்சி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளரும் தனது அப்பதிவை நீக்கிவிட முடிவுச் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!