
ஷா ஆலாம், ஜூலை-25-சிலாங்கூர், குவாலா லங்காட்டில் மாணவர் குடியிருப்புக் பகுதியின் குப்பைக் கிடங்கில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உயர்கல்விக்கூட மாணவி ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில், துணியால் சுற்றப்பட்ட அக்குழந்தையின் சடலத்தை உள்ளூர் ஆடவர் ஒருவர் கண்டெடுத்து, போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸார், அக்குழந்தையின் தாய் என நம்பப்படும் பதின்ம வயது கல்லூரி மாணவியை அடையாளம் கண்டு கைதுச் செய்தனர்.
குழந்தையை வீசி எறிந்த குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, மேலும் பல தகவல்களைப் பெற அப்பெண் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கூடுதல் தகவல்கள் தெரிந்த பொது மக்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



