
ஈப்போ, செப்டம்பர் 8 -ஈப்போ பூலாய் ஜெயா தொழிற்பேட்டை பகுதியிலுள்ள தொழிற்சாலையிலிருந்து 355,000 ரிங்கிட் மதிப்பிலான உற்பத்திப் பொருட்களைத் திருடிய மூன்று ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.
செப்டம்பர் 7ஆம் தேதி நிறுவனத்தின் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தொழிற்சாலையிலிருந்து 64 உருளை வடிவிலான உற்பத்திப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 28 முதல் 35 வயதுடைய இரு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவர்.
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முஹமட் நஜீப் ஹம்சா கூறுகையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஈப்போ நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் கோரி ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொருட்களின் உண்மையான இழப்பு, மொத்த நஷ்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



