
கோலாலம்பூர், மார்ச் 24-பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டு கழகம் , தற்போதைய மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகார மேம்பாட்டுப் பிரிவுடன் இணைந்து 13ஆவது ஆண்டாக கவிபாடும் தென்றல் 13.0 பல்வேறு போட்டி நிகழ்சிகள் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம்தேதி காலை 7.00 முதல் மாலை 7.00 வரை நடைபெறவிருக்கிறது.
மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் DEWAN TUANKU SYED PUTRA மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளைக் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் ,அரசாங்க மற்றும் தனியார் உயர் கல்வி கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் இலவசமாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கவிதை வாசிக்கும் போட்டி, இலக்கிய புதிர் போட்டி, பேச்சுப் போட்டி, திரைப்பட உருவாக்கம் போட்டி, சிறுகதை எழுதும் போட்டி மற்றும் வாத-விவாதம் போட்டி ஆகியவை நடைபெறும்.
குறும்படம் போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு நாள் முடிவடைந்துவிட்டது.
இதர போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்து கொள்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 4ஆம்தேதியாகும்.
மாணவர்கள் மேல் விவரங்களுக்கு திரையில் காணும் எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
Andrew – 016-419 2835
Dhinesaan – 011-27647055



