
புத்ராஜெயா, மார்ச்-27-3 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், BUDI95 எரிபொருள் திட்டத்தின் கீழ் மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கு தகுதி பெற மாட்டார்கள்.
சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ அதனைத் தெரிவித்துள்ளது.
36 மாதங்களுக்கு உட்பட்ட காலாவதி உரிமங்கள் மட்டுமே “இன்னமும் செயல்பாட்டில் உள்ளவை” எனக் கருதப்படும் என அதன் தலைமை இயக்குநர் டத்தோ Aedy Fadly Ramli கூறினார்.
3 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான உரிமம் கொண்டவர்கள், உரிமத்தைப் புதுப்பிக்க முடியாது.
அவர்கள் மீண்டும் ஓட்டுநர் தேர்வை எழுத வேண்டும்.
எனவே, உரிமத்தை காலாவதியாக விடாமல் சரியான நேரத்தில் புதுப்பித்து விடுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், BUDI95 திட்டத்தின் மாதாந்திர அளவு 300 லிட்டரில் இருந்து 200 லிட்டராக ஏப்ரல் 1 முதல் மறுசீரமமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த RON95 பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆகவே தொடருகிறது…



