Latestமலேசியா

டாமான்சாராவில் 2 கத்திகளுடன் ஆடவர் ஆவேசம்; போலீஸ் வளைத்துப் பிடிப்பு

பெட்டாலிங் ஜெயா, மே-5-டாமான்சாரா பெர்டானாவில் 2 கத்திகளுடன் ஆவேசமாக நடந்துகொண்ட ஆடவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சந்தேக நபர் ஆபத்தான முறையில் நடந்து கொண்டு அருகிலிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எந்த பெரிய சேதமும் ஏற்படுவதற்கு முன் அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர் மேல் நடவடிக்கைக்காக டாமான்சாரா போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டார்.

பொது இடத்தில் அபாயகரமான ஆயுதம் வைத்திருந்தது தொடர்பில் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!