Latestமலேசியா

லங்காவியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஜெட் ஸ்கியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் மாயம்

லங்காவி, மே-29 – கெடா, லங்காவி, பந்தாய் தெங்ஙா கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஜெட் ஸ்கியை (Jet ski) மீட்க முயன்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

23 வயதான Arash Nashran Abdul Maserஎன்ற அந்த இளைஞர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜெட் ஸ்கியை நோக்கி நீந்திச் சென்றபோது, பலத்த அலையின் காரணமாக நீரில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது.

சம்பவத்தின் போது அவர் பாதுகாப்பு ஜேக்கேட் அணிந்திருக்கவில்லை என லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தற்போது, அவரைத் தேடும் பணியில் கடலடி மீட்புக் குழுவினர் (PPDA) தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!