
உலு சிலாங்கூர், ஜூன்-11 – சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக (OCPD) சூப்ரிடெண்டண்ட் மணிமாறன் முனியாண்டி இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையக வளாகத்தில் இன்று காலை இந்த பதவி ஒப்படைப்பு விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் முன்னாள் உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர், அசிஸ்டண்ட் கமிஷனர் இப்ராஹிம் ஹுசின், புதிய போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் மணிமாறனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்நிகழ்வை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ Pahlawan Shazeli Kahar நேரில் முன்னின்று சாட்சியமளித்து சிறப்பித்தார்.
இதனுடன் இணைந்து, உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் குடும்ப நல அமைப்பான ‘பெர்கெப்’ (PERKEP) தலைவராக, மணிமாறனின் துணைவியார் புஷ்பவள்ளி பாலகிருஷ்ணனும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சிலாங்கூர் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
போலீஸ் படையில் 40 ஆண்டு காலம் சேவையாற்றியுள்ள OCPD மணிமாறன், இதற்கு முன் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் நெறிமுறை மற்றும் தர நிலை இணக்க இலாகாவின் துணைத் தலைவராக பணியாற்றியவராவார்.



