
டெக்சஸ், ஜூலை-7 – கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவு, இந்த 2026 உலகக் கிண்ணத்தோடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா டல்லாஸில் இன்று காலை நடைபெற்ற கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த பரபரப்பான ஆட்டத்தில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே மிகக் கடுமையான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தின.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91-ஆவது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் மிக்கேல் மெரினோ கோல் அடித்து வெற்றியை உறுதிச் செய்தார்.
இந்தத் தோல்வியின் மூலம், தனது ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியிலும் ரொனால்டோ, கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பின்றி உலகக் கிண்ணப் பயணத்திற்கு விடை கொடுத்துள்ளார்.
41 வயதான ரொனால்டோ, இதுவே தனது இறுதி உலகக் கிண்ணம் என முன்னதாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போர்ச்சுகல் அணியின் இந்த வெளியேற்றம், உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



