Latestமலேசியா

கோலாலம்பூர் வீட்டில் தவறி விழுந்த முதிய பெண் மீட்பு; கணுக்காலில் எலும்பு முறிவு

கோலாலம்பூர், ஜூலை 10 – கோலாலம்பூர் சாலாக் சவுத் கார்டனில், வீட்டில் தனியாக இருந்த 89 வயதுடைய பெண் தவறி விழுந்ததில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை, சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சுங்கை பெசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு சென்றபோது, பொதுமக்கள் வீட்டின் கதவை ஏற்கனவே திறந்திருந்தனர். வீட்டின் சமையலறையில் விழுந்து கிடந்த முதிய பெண்ணின் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

தீயணைப்பு வீரர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனை (HKL) ஆம்புலன்ஸ் குழுவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!