Latestமலேசியா

கிள்ளானில் ரோக்கியைப் பிடிக்கும் நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்படவில்லை – மேயர் விளக்கம்

கிள்ளான், ஆகஸ்ட்-4-கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் தெரு நாய் ஒன்றைப் பிடிக்கும் போது ஏற்பட்ட சம்பவத்தில், மாநகர மன்ற அதிகாரிகள் உரிய SOP நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றியே செயல்பட்டதாக, கிள்ளான் அரச மாநகர மன்ற மேயர் டத்தோ Abd Hamid Hussain தெரிவித்துள்ளார்.

​அங்கு நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது அதிகாரிகள் 12 நாய்களைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.

ஆனால், 13-ஆவது நாயைப் பிடிக்கும் போது, அது தன்னுடைய நாய் எனக் கூறி அப்பகுதி வாழ் மக்களில் ஒருவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்தச் சிக்கலின் போது நாய் எதிர்பாராதவிதமாகக் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர் விளக்கியுள்ளார்.

​இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைப் கையாளும் முறையைச் சமநிலையில் பேண வேண்டியதன் அவசியத்தை மேயர் சுட்டிக் காட்டியுள்ளார்.

​இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!