
டுங்குன், செப்டம்பர்-8,திரங்கானு, டுங்குனில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 4 மாதக் பெண் குழந்தை ஒன்று சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் தாய் குழந்தையை நல்ல ஆரோக்கியமான நிலையில் காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
எனினும், காலை 10 மணியளவில் குழந்தைக்குப் பால் கொடுத்து உறங்க வைத்தப் பிறகு, குழந்தை சுயநினைவின்றி இருப்பதை மைய ஊழியர்கள் கவனித்துள்ளனர்.
உடனடியாகக் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டுங்குன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை நண்பகல் 12.45 மணியளவில் உயிரிழந்து உறுதிச் செய்யப்பட்டது.
குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், சவப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கும் வரை இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்டப் போலீஸார் கூறினர்.



