Latestஇந்தியா

மேற்கு வங்கத்தில் 175 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கங்கையில் இடிந்து விழுந்தது

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள மால்டா (Malda) மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், ரதுவா பகுதியிலிருந்த 175 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கங்கை ஆற்றில் இடிந்து விழுந்தது.

கங்கை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததுடன், ஆற்றங்கரையும் வேகமாக அரிக்கப்பட்டது. இதனால் கோயில் இருந்த பகுதி ஆற்றுக்குள் சென்றது.

புட்னி (Bhutni) தீவு பகுதியில் தடுப்பணை உடைந்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அங்கிருந்த 62 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மருத்துவமனையும் மூடப்பட்டதால், நோயாளிகளுக்கு மாற்று இடத்தில் சிகிச்சை வழங்கப்பட் டு வருகிறது.

ரதுவா (Ratua) பகுதியில் 1,725 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஆங்கில பஜார் (English Bazar) பகுதியில் 63 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!