
அர்ஜென்டினா, செப்டம்பர் 25 – அர்ஜென்டினாவில் நூற்றுக்கணக்கான குட்டித் திமிங்கலங்கள் உயிரிழந்ததற்கு பேக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாமென கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் முதல் Southern Right Whale இனக் குட்டிகள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன. ‘Erysipelas’ எனப்படும் பேக்டீரியா நோய் காரணமாக இருக்கலாமென கால்நடை மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். ஆரம்பகட்ட ஆய்வுகளிலும் கடலில் காணப்படும் பேக்டீரியா காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு அப்பகுதியில் 2,110 திமிங்கலங்கள், அதில் 800 குட்டிகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 1,375 திமிங்கலங்கள், அதில் சுமார் 400 குட்டிகள் பதிவாகியுள்ளன. தற்போதைய உயிரிழப்புகள் திமிங்கல இனத்தின் எண்ணிக்கைக்கு நடுத்தர காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



