Latestமலேசியா

AI தொழில்நுட்பத்தின் மூலம் சமயத்தை இழிவுப்படுத்தும் செயல்: தகவல் தொடர்பு அமைச்சருடன் விரைவில் சந்திப்பு – டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர், ஜனவரி 20 – சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ள பத்துமலை திருத்தலத்தில் உள்ள முருக பெருமான் சிலையை, AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப் பயணி ஒருவர் அண்மையில் இழிவுப்படுத்திய சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்து சமயத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ம.இ.காவின் தேசிய பொருளாரும், மஹிமா அமைப்பின் தலைவருமான டத்தோ சிவக்குமார் கவலையுடன் சுட்டிக்கட்டினார்.

இது போன்று AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் நாச வேலைகளை தடுக்க தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க சமூக ஊடக நிறுவனங்களே முன்வர வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலுடன் விரைவில் சந்திப்பு ஒன்றும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று பத்துமலையில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் அவர் இடித்துரைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!