
பெடோங், ஏப்ரல்-12- ம.இ.காவின் AIMST பல்கலைக்கழகத்தை இந்திய மாணவர்களின் முதன்மை தேர்வாக ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அண்மையில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்த இலவச கல்விச் சுற்றுலாவில் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்நிலையில், நேற்று கெடா மாநில ம.இ.கா ஏற்பாட்டில் 2,000 மாணவர்கள் AIMST பல்கலைக்கழகத்தில் இந்த 1 நாள் இலவச கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.
நான்காம், ஐந்தாம் படிவங்களில் படிப்பவர்கள் மற்றும் SPM, STPM தேர்வெழுதி முடிவுக்காகக் காத்திருப்பவர்கள் என அவர்கள் அனைவரும் 50 பேருந்துகளில் பீடோங்கில் உள்ள AIMST பல்கலைக் கழக முதன்மை வளாகத்தில் வந்திறங்கினர்.
இறங்கிய கையோடு மாணவர்கள் AIMST பல்கலைக் கழகத்தின் பிரமாண்ட தோற்றத்தையும் அதிநவீன வசதிகளையும் கண்டு மலைத்துப் போயினர்.
இள வயதிலேயே மாணவர்களைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு குறித்து கனவு காண்வதை தூண்டும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
AIMST பல்கலைக் கழகம் வழங்கும் பட்டய (டிப்ளோமா) மற்றும் பட்டப்படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது,
அறிவியல், கலை, வணிகம் என எல்லா முதன்மைத் துறைகளுக்கான புலங்களுக்கும் அவர்கள் கொண்டுச் செல்லப்பட்டனர்.
பொறியியல், கணினி அறிவியல் தொடங்கி பல் மருத்துவம் வரையிலான நிபுணத்துவப் பட்டப்படிப்புகள் குறித்து, AIMST பணியாளர்களும், விரிவுரையாளர்களும் மாணவர்களுக்கு துல்லியமாக விளக்கமளித்தனர்.
முக்கியமாக AIMST-டில் மேற்கல்வியைத் தொடர பட்டய மற்றும் படப்படிப்புகளுக்குத் தேவையான தகுதிகள் குறித்தும் தெளிவுரை வழங்கப்பட்டது.
மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், உளவியல் நிபுணர்கள், பொறியியலாளர்கள், வர்த்தக வல்லுநர்கள் என 8,922 பட்டதாரிகளை உருவாக்கியிருப்பதாக, AIMST-சின் பெருமைகளை அதன் துணை வேந்தனரும் தலைமை செயலதிகாரியுமான பேராசிரியர் Dr கதிரேசன் வி.சதாசிவம் கூறினார்.
கல்விச் சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள், AIMST-டில் தாங்கள் அடைந்த பயனை, மற்றவர்களிடத்திலும் பகிர்ந்திட வேண்டுமென, கெடா ம.இ.கா தலைவர் எஸ்.கே சுரேஷ் கேட்டுக் கொண்டார்.
ஆர்வத்தையும் தூண்ரி சரியான வழிகாட்டுதலையும் வழங்கினாலி அனைத்து மாணவர்களையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் பல்கலைக்கழகமான ஏய்ம்ஸ்ட் இதனை புரிந்துக்கொண்டு மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களுக்கு வழிகாட்டா என்றுமே தயார்.
தரம் என்றால் அது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்