
செண்டாயான், ஆகஸ்ட்-7- நெகிரி செம்பிலான், செண்டாயானில் பெண் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட asam boi பானத்தில் சிறிய தவளை இருந்ததாக கூறப்படும் உணவகம், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புகார் கிடைத்ததை அடுத்து கடந்த வெள்ளிக் கிழமை சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அங்கு சோதனை நடத்தியது.
ஆய்வில், அவ்வுணவகம் உணவுப் பாதுகாப்புத் தரத்தைப் பூர்த்திச் செய்யத் தவறியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, Jalan Pusat Dagangan Sendayan 3-ரில் உள்ள அவ்வுணவகத்திற்கு 2 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண், கிளாஸில் தவளை இருப்பதை கவனிக்காமல் கால்வாசி பானத்தை குடித்து விட்ட பிறகே, உள்ளே ஏதோ வித்தியாசமான பொருள் இருப்பதை உணர்ந்துள்ளார்.
சந்தேகத்தில் பானத்தை கிளறி பார்த்த போதே, உள்ளே இருப்பது சிறிய தவளை என்பதை கண்டு தாம் அதிர்ந்துபோனதாக, முன்னதாக வைரலான டிக் டோக் வீடியோவில் கூறியிருந்தார்.
அவ்வீடியோவுக்கு 2.1 மில்லியன் பார்வைகளும், 56,0000-க்கும் மேற்பட்ட likes-களும் 4,000-கும் மேற்பட்ட கருத்துகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.